சரியான நேரத்தில் விவரங்களுக்கான அணுகலை வழங்குவது, மற்றும் ஆபத்தான நிலையில் மற்றும்/அல்லது புகார்களுடன் உள்ள பெண்களுக்கும், குழந்தைகளுக்குமான குறைதீர்க்கும் செயல்முறையை செயல்படுத்துவது ஆகியவற்றுக்கான நமது கண்ணோட்டம்.
இந்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம், பிரச்சினையில் இருக்கின்ற பெண்களுக்கு ஆதரவளிப்பதற்காக, மகளிர் உதவி எண் 181 என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. காவல் துறை, ஒன் ஸ்டாப் மையம் (ஓ.எஸ்.சி), மருத்துவமனை போன்ற பொருத்தமான அதிகார அமைப்புக்குப் பரிந்துரைகளை அளிப்பதன் மூலமும், ஒரே ஒரு சீர்மை எண்ணின் வழியாக, மகளிர் தொடர்பான மாநிலம் முழுவதும் உள்ள திட்டங்கள், சேவைகளைப் பற்றிய விவரங்களை அளிப்பதன் மூலமும், வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு 24 மணி நேரமும் உடனடியான மற்றும் அவசர கால உதவியை வழங்கும் நோக்கத்துக்காக, மகளிர் உதவி எண்ணின் பொதுமைப்படுத்தல் திட்டம் உள்ளது.
தமிழ்நாட்டில் மகளிர் உதவி எண் (181 மகளிர் உதவி எண்), 10 டிசம்பர், 2018 அன்று, இந்த உதவி எண், குடும்பம், சமுதாயம், பணியிடம் போன்றவை உள்ளிட்ட தனியான அல்லது பொதுவிடங்கள் இரண்டிலும், வன்முறையை அல்லது வன்முறைக்கான மிரட்டலை எதிர்கொண்டு, துயரத்தில் இருக்கின்ற பெண்களுக்கு ஆதரவளிப்பதற்காகவே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டதாகும்.
181 மகளிர் உதவி எண் (மகளிர் உதவி எண்), வீட்டிலுள்ளவர்கள் அல்லது அந்தரங்கத் துணையால் செய்யப்படுபவை உள்ளிட்ட எந்த வகை வன்முறையிலும் பாதிக்கப்பட்டு, தப்பிப் பிழைத்த மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான 24-மணி நேர இரகசிய சேவையாகும். இந்த பல்நோக்கு அலைவரிசையானது, 181 ஐ டயல் செய்வதன் மூலம், மின்னஞ்சல் மற்றும் ஆன்லைன் உரையாடல் மூலம் கிடைக்கிறது. அனைத்து அழைப்புகளும் இலவசம் மற்றும் இரகசியமானது.
இந்த உதவி எண், வீட்டு வன்முறை, வன்கொடுமையின் வகைகள், பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பான சட்டங்கள் மற்றும் மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான அரசாங்கத் திட்டங்கள் போன்ற பெண்களுக்கு எதிரான பொதுவான வன்முறை வகைகள் பற்றிய பல்வேறு தேர்வுகளையும், விவரங்களையும் வழங்குகிறது. உறவுகளில் வன்முறையைத் தடுக்கவும், முடிவுக்குக் கொண்டு வரவும், ஆரோக்கியமான உறவுகளை ஊக்குவிக்கவும் இளைஞர்களுக்கு ஆற்றல் அளிப்பதற்காக 181 மகளிர் உதவி எண், 181 ‘யூ’த் தூதர்கள் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
181 மகளிர் உதவி எண், பின்வருவனவற்றை வழங்குகின்ற இலக்குடன் செயல்படுகிறது
சிறப்பான-பயிற்சி அளிக்கப்பட்ட வல்லுநர்கள், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இரகசியமான
மற்றும் பரிவான ஆதரவு, விவரங்கள் மற்றும் பரிந்துரை சேவைகளை வழங்குகிறார்கள்.
181 மகளிர் உதவி எண்ணுக்கு அழைக்க விரும்புகின்ற, ஆனால் காது கேளாமை அல்லது காது கேட்பதில் சிரமம் உள்ளவர்களுக்கு, விளக்கிக் கூறுவதற்காக சைகை மொழியை அறிந்துள்ள, நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட ஆலோசகர்கள் எங்களிடம் உள்ளனர். இந்த ஆலோசகர்கள், 181 ஆதரவு சேவை தேவைப்படுபவர்களுக்கு உதவுவதற்காக, நேரலை உரையாடல் வழியாக 24/7 இருக்கிறார்கள்.
இப்போது உதவி தேவையா? இப்போது உதவி தேவையா? சப்ஜெக்ட் களத்தில் பிரத்தியேக சேவை எனக் குறிப்பிட்டு, உங்கள் பெயர், தொலைபேசி எண்னை (வீடியோ-வசதி கொண்டது) எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். திரும்ப அழைப்பதற்காக காது கேளாமை கொண்ட எங்கள் ஆலோசகர்கள் 24/7 காத்திருக்கிறார்கள்.
உங்களுக்கு மரியாதைக்குரிய உறவுக்கான தகுதி உண்டு.
நீங்கள் பேச விரும்பினால் இதோ நாங்கள் இருக்கிறோம்.