மகளிர் உதவி எண்.
இலவசம். நம்பகமானது. 24/7.

Laws Icon

நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய சட்டங்கள்

எந்த வகையான வன்முறையும் சட்ட விரோதமானது. வன்முறையால் பாதிக்கப்பட்ட மகளிர் மற்றும் குடும்பத்தினருக்கு பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த இந்திய சட்டங்கள், பாதுகாப்பும், ஆதரவும் அளிக்கிறது. தொடர்பான மிகவும் தனிச்சிறப்பு வாய்ந்த சட்டங்கள்…

மேலும் படிக்க
WHL Statistics Icon

மகளிர் உதவி எண் புள்ளிவிவரங்கள்

மகளிர் உதவி எண் புள்ளிவிவரங்கள் மகளிர் உதவி எண் மூலம் மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு 24/7 ஆதரவையும், தகவல்களையும் வழங்கி வரும் அனுபவத்தில், தமிழநாட்டு மகளிர், உறவுமுறைகளிடையே கடுமையான சவால்களை என அறிய முடிகிறது. தெரிவிக்கப்பட்ட விவரங்கள்.மகளிர் உதவி எண்.……

மேலும் படிக்க
Latest News Icon

சமீபத்திய செய்தி

மகளிர், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையை தமிழ்நாடு அதிகரித்துள்ளது. இதற்கான மசோதா, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் திரு. சி.வி சண்முகம் அவர்களின் வழிகாட்டுதலின் படி, இந்திய தண்டனைச் சட்டத்தை அதன் பொருந்தக்கூடிய வகையில் திருத்தியது.…

மேலும் படிக்க
Life Changing Stories Icon

வாழ்க்கையை மாற்றிய கதைகள்

தற்போது தவறாக நடத்தப்படுவதை எதிர்கொண்டு வருகின்ற மற்றவர்களுக்கு நம்பிக்கையளிப்பதற்காக, வன்முறையில் இருந்து தப்பிப் பிழைத்துள்ள பெண்களின் சக்தி வாய்ந்த வாழ்க்கைக் கதைகளை உங்களிடம் கொண்டு வருகிறோம். ஒவ்வொருவரின் கதையும் தனித்துவமானது, இந்த தைரியமிக்க பெண்மணிகள் விருப்பத்துடன் அவற்றைப் பகிர்ந்து கொள்கின்றனர்…

மேலும் படிக்க

எங்கள் வல்லுநருடன்
நேரலை உரையாடல்

Animation Photo

உங்களுடைய தனியுரிமையும், பாதுகாப்பும் மிகவும் முக்கியமானவை.

உங்களுடைய பாதுகாப்பே எங்களுக்கு மிகவும் முக்கியம். 181 இரகசிய ஆதரவை 24/7 மகளிர் உதவி மையம் வழங்குகிறது. உங்களுக்கு விவரங்களையும், பரிந்துரைகளையும் வழங்குகின்ற எங்களுடைய பயிற்சி பெற்ற ஆலோசகர்களுடன் நீங்கள் உரையாடலாம். இப்போது எங்களுடைய வழிகாட்டுதல் மற்றும் ஆலோசகரைக் கூட நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.

தற்போது உரையாடு

உங்களுடைய பாதுகாப்பை உறுதி செய்யவு ம், உங்களுடைய தேவைகளுக்கு விரைவாகப் பதிலை வழங்கவும் 181 மகளிர் உதவி எண் தமிழ்நாடு வழியாக, பாதுகாப்பான மற்றும் நம்பகமான உரையாடல் செய்யலாம்.

“தற்போது உரையாடு” என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், விதிகள் மற்றும் நிபந்தனைகளை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள்..

181 - மகளிர் உதவி எண்ணின் குறிக்கோள்கள்

Toll-Free Icon

சச்சரவுகளால் பாதிக்கப்பட்டு, ஆதரவையும், விவரங்களையும் எதிர்நோக்குகின்ற பெண்களுக்கு இலவச-24- மணி-நேர தொலைபேசி சேவையை அளித்திட.

Crisis Intervention Icon

தகுந்த முகமைகளுக்கு பரிந்துரைப்பதன் மூலமாக, நெருக்கடியான அல்லது நெருக்கடியல்லாத தலையீட்டினை அளித்திட.

Support Services Icon

வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்குத் தேவையான, தகுந்த ஆதரவளிக்கும் சேவைகள், அரசுத் திட்டங்கள் மற்றும் சேவைகள் பற்றிய விவரங்களை வழங்கிட.

ஒரு ஆரோக்கியமான உறவு என்ன என்பதை அறிந்து கொள்வது, சில நேரங்களில் துஷ்பிரயோகப்படுத்தப்படுவதை அடையாளம் காணப் பயன்படுகிறது.

ஆரோக்கியமான உறவுகள் என்பவை, உங்களுக்கும் உங்கள் நண்பருக்குமிடையே, உங்களுக்கும் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்குமிடையே, அல்லது உங்களுக்கும் உங்கள் வாழ்க்கைத்துணைக்குமிடையே உருவாகக் கூடியவையாகும். ஒரு ஆரோக்கியமான உறவு என்பது, அதில் ஈடுபட்டுள்ளவர்களுக்கிடையேயான அன்பு, நம்பிக்கை, மரியாதை மற்றும் பரஸ்பர அக்கறையின் அடிப்படையில் அமைகிறது.

தவறு செய்பவர்கள் உணர்வுரீதியாகவும், உடல்ரீதியாகவும் தவறாகப் பயன்படுத்தப்படுகின்ற சூழ்நிலைகளில் வளர்க்கப்பட்டிருந்து, அதனால் தங்களுடைய உணர்வுகளுக்கு ஈடு கொடுப்பதற்கான ஒரு வழியாக வன்கொடுமை செய்வதை பயன்படுத்தக் கற்றுக் கொண்டிருக்கலாம்.

மேலும் வாசிக்க
Healthy Relationship Image
Join the Movement Image

இயக்கத்தில் இணையுங்கள்

வளரும் தலைமுறைகளுக்காக மிகவும் சமத்துவமான எதிர்காலத்தைக் கட்டமைப்பதில் பங்கு கொள்ளுங்கள். செயல்படுவதற்கான அழைப்புகள், உங்கள் குரல் தேவைப்படுகின்ற பிரச்சாரக் கூட்டங்கள் மற்றும் நீங்கள் இருக்கும் இடத்திலேயே ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகின்ற வழிகள் ஆகியவற்றின் ஒரு பகுதியாக நீங்கள் இருக்கலாம்.

நான் ஒரு 181 போராளி
Right Side Image

பெண்களை முதன்மைப்படுத்துகின்ற அரசு

இந்திய அரசானது, தமிழ்நாட்டுக்கு, பெண்களுக்கான உதவி எண்ணாக 181 ஐ ஒதுக்கியுள்ளது, இது வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 24*7 அவசர உதவியை அளிக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. பரிந்துரைகளும் (காவல் துறை, ஒன் ஸ்டாப் மையம், மருத்துவமனை போன்ற அதற்குரிய அதிகார அமைப்புடன் இணைப்பை ஏற்படுத்துதல்), மகளிர் தொடர்பான அரசுத் திட்டங்கள் பற்றிய விவரங்களும் வழங்கப்படுகின்றன.

இந்த மகளிர் உதவி எண், அம்மா உதவி மையத்துடன் இணைந்து செயல்படுமாறு தொடங்கப்பட்டது, 10 டிசம்பர், 2018 அன்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.

TamilNadu Logo

உங்கள் பாதுகாப்பு முக்கியமானது/ நீங்கள் உடனடியான ஆபத்தில் இருக்கிறீர்கள் என்றால்,
100 அல்லது
காவலன் செயலியைப் பதிவிறக்கம் செய்யவும்