2016 ஆம் ஆண்டில், ஒட்டுமொத்த நகரத்திலும் பாலியல் பலாத்காரம், வீட்டு வன்முறை, ஆசிட் தாக்குதல், பின் தொடர்தல், அல்லது வரதட்சணை கேட்டல் ஆகியவற்றில் ஒரே ஒரு வழக்கு கூட இல்லை என அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எனப் பார்க்கும் போது இந்த நகரம் நல்ல பதிவைக் கொண்டுள்ளது. நகரத்தில், 2015 ஆம் ஆண்டில் இரண்டு பாலியல் பலாத்கார வழக்குகள் மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்தப் பதிவானது 2016 இல் மேம்பட்டுள்ளது. நகரத்தில், பெண்களுக்கு எதிரான குற்றங்களின் ஏழு பிரிவுகளிலும் எந்த வழக்குகளும் தாக்கல் செய்யப்படாமல் உள்ளது. இந்தப் புள்ளிவிவரங்கள், குற்றங்களைத் தடுப்பதிலும், கட்டுப்படுத்துவதிலும் எடுக்கப்பட்ட தீவிரமான நவடிக்கைகளின் விளைவாகும் எனக் கோயம்புத்தூர் காவல் துணை ஆணையர் எஸ். லட்சுமி கூறுகிறார். மேலும் ‘ஆபரேஷன் ஜீரோ கிரைம்’ என்ற முன்னெடுப்பையும் காவல் துறை தொடங்கியுள்ளது.
YOUR SAFETY IS IMPORTANT. IF YOU ARE IN IMMEDIATE DANGER, CALL 100 or
DOWNLOAD KAVALAN APP