குடும்பத்துக்குள்,சமுதாயத்தில் மற்றும் பணியிடத்தில், தனிப்பட்ட மற்றும் பொது இடங்களில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவு அளிக்கும் நோக்கத்தோடு, ஒன் ஸ்டாப் துயர் மையமான (ஓ.எஸ்.சி) “சகி” எனப் பெயரிப்பட்ட ஒரு பிரத்தியேகமான திட்டத்தை இந்திய அரசு அறிவித்துள்ளது. உடல் ரீதியான, பாலியல் ரீதியான, உணர்ச்சி ரீதியான, உளவியல் ரீதியான மற்றும் பொருளாதார ரீதியான வன்கொடுமையை எதிர்கொள்கின்ற பெண்களுக்கு, வயது, வர்க்கம், சாதி, கல்வி நிலை, திருமண நிலை, இனம் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் ஆதரவு மற்றும் நிவாரணம் வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தின் நோக்கம், வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒருங்கிணைந்த ஆதரவையும், உதவியையும் வழங்குவதாகும். பெண்களுக்கு எதிரான வன்முறையின் எந்த வகை வடிவத்தையும் எதிர்த்துப் போராடுவதற்கு, மருத்துவ ரீதியான, சட்டரீதியான, உளவியல்ரீதியான மற்றும் ஆலோசனை ரீதியான பரந்த அளவிலான சேவைகளின் உடனடி, அவசர கால மற்றும் அவசரமற்ற அணுகுதலை வழங்குவதாகும்.

பின்வரும் சேவைகளுக்கான அணுகலை ஓ.எஸ்.சி வழங்கும்:
1. அவசர கால பதிலளிப்பு மற்றும் மீட்பு சேவைகள்
2. மருத்துவ உதவி
3. எஃப்.ஐ.ஆர்/என்.சி.ஆர்/டி.ஐ.ஆர் பதிவு செய்தலில் பெண்களுக்கு உதவி