Banner

மகளிர் உதவி எண்.
இலவசம். நம்பகமானது. 24/7.

ஆரோக்கியமான உறவுகளைப் புரிந்து கொள்வது, வன்கொடுமை செய்யப்படுவதை உணர்ந்து கொள்ள உதவுகிறது

அனைத்து உறவுகளும் வேறுபட்ட வகையில் இருக்கும் வேளையில், தவறாக நடத்தப்படுகின்ற ஒரு உறவையும், ஆரோக்கியமான ஒன்றையும் வேறுபடுத்திக் காட்டுகின்ற சில முக்கியமான பண்புகள் உள்ளன. ஆரோக்கியமான உறவுகள், நேர்மை, மரியாதை, நம்பிக்கை மற்றும் தகவல் தொடர்பு ஆகியவற்றின் மீது கட்டமைக்கப்படுகின்றன.

உங்கள் உறவு நிலையைப் புரிந்துகொள்ள இந்த உறவுநிலை அலைவரிசை உதவியாக இருக்கும்..

Healthy Relationships Table

ஆரோக்கியமானது

ஆரோக்கியமான உறவுநிலை என்பது நீங்கள் மற்றும் உங்கள் துணை இருவரும் பின்வருமாறு இருப்பதைக் குறிக்கிறது:

ஆரோக்கியமற்றது

You may be in an unhealthy relationship if your partner is:

தவறாக நடத்துதல்

உங்கள் வாழ்க்கைத்துணை பின்வருமாறு இருக்கும் போது, அது தவறாக நடத்தப்படுகின்ற உறவாகிறது:


உறவுநிலைகளில் வன்கொடுமை செய்யப்படுவதை உணர்ந்து கொள்ளுதல்

தவறாக நடத்துகின்ற நடத்தை என்பது, பயம், அவமானம், உணர்வுப்பூர்வ அச்சுறுத்தல், வார்த்தைகள் மூலம் மற்றும் உடல்ரீதியான தாக்குதல்கள் ஆகியவற்றின் வழியாக, மற்றொரு நபரின் மீது அதிகாரத்தையும், கட்டுப்பாட்டையும் செலுத்துவதாகும். வாழ்க்கைத் துணை வன்முறை அல்லது குடும்ப வன்முறை எனவும் அழைக்கப்படுகின்ற வீட்டு வன்முறை என்பது, ஒரு அந்தரங்கமான உறவில் ஒரு வாழ்க்கைத் துணை மீதான அதிகாரத்தையும், கட்டுப்பாட்டையும் செலுத்துவதற்காக மற்றொரு வாழ்க்கைத் துணை பயன்படுத்துகின்ற நடத்தைகளின் வடிவமாகும். இங்கே கிளிக் செய்யவும்


தவறாக நடத்தப்படுவதற்கான பொதுவான அறிகுறிகளில் அடங்கக் கூடியவை:

  • * குடும்பத்தினர்/நண்பர்கள் முன்னிலையில் உங்களைக் கேலி செய்தல் அல்லது அவமானப்படுத்துதல்.
  • * உங்கள் குடும்பத்தினருடன்/நண்பர்களுடன் நீங்கள் நேரம் செலவிடும் போது, உங்களைக் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்குதல்.
  • * உங்கள் நிதிகளைக் கட்டுப்படுத்துதல்/உங்கள் விருப்பப்படி உங்கள் பணத்தை செலவிட அனுமதிக்காமல் இருத்தல்.
  • * வேலை, கல்வி போன்றவை குறித்த உங்கள் விருப்பங்களைக் கட்டுப்படுத்துதல்.
  • * பாலியல் உறவில் ஈடுபட, அல்லது உங்களுக்குப் பிடிக்காத செயல்களை செய்ய உங்களைக் கட்டாயப்படுத்துதல்.
  • * உங்கள் குழந்தை வளர்ப்பில் குறை கண்டுபிடித்தல், அல்லது குழந்தைகளுக்கோ அல்லது செல்லப்பிராணிகளுக்கோ தீங்கு விளைவிப்பதாக அச்சுறுத்துதல்.
  • * உங்கள் உடமைகளை அழித்தல்.
  • * உங்களை இழிவுபடுத்துதல் அல்லது திறமையற்றவராக உணர வைத்தல்.
  • * மது அல்லது போதைப் பொருட்களைப் பயன்படுத்துமாறு கட்டாயப்படுத்துதல்.
  • * உங்கள் கடவுச்சொற்களைக் கூறுமாறு உங்களைக் கட்டாயப்படுத்துதல்.

தொடர்பில் இருங்கள்

உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், எங்கள் தொடர்பு படிவத்தின் மூலமாக எளிதாக நீங்கள் எங்களை அணுகலாம். விரைவில் நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்வோம்.

CONTACT US

RECOGNIZING ABUSE IS THE FIRST STEP. 181 WHL IS HERE TO SUPPORT.